Thursday, October 10, 2013





வெயில்காலத்துக்கு ஏற்ற மிக அருமையான வயிற்றுக்கு இதமான குளு குளு ஜூஸ் என்றால் லஸ்ஸி தான்.


லஸ்ஸி நான் ஸ்கூல் போகும் வழியில் ஒரு அம்மா வீட்டு வாசலில் லஸ்ஸி செய்யும் மோட்டார் மத்துடன் கடைந்து விற்பார்கள்.
அந்த பக்கமாக போகும் யாருமே ஒரு டம்ளர் வாங்கி குடிக்காமல் செல்ல மாட்டார்கள் அவ்வளவு ருசி.

ஃப்ரஷாக தானே வீட்டில் தயிர் தயாரித்து, ரொம்ப சுத்தமாக செய்வார்கள்.

நாங்க எல்லாரும் ஸ்கூல் போனதும் அம்மா, பெரிமா சித்தி எல்லாரும் மார்கெட்க்கு மீன் வாங்க செல்வார்கள். வெயிலில் களைத்து மீன் வாங்கி வரும் போது வழியில் அவர்கள் இந்த லஸ்ஸியை வாங்கி குடித்து விட்டு தான் வருவார்கள்.நாங்கள் மாலை வரும் போது சுட சுட மீன் குழம்பு ரெடியாக இருக்கும்.

நானும் என் தங்கையும் கடைக்கு சாமான்கள் வாங்க செல்லும் போது சில நேரம் வாங்கி குடிப்போம்.
அப்ப அவங்க லஸ்ஸி கடைவதை போது நின்று பார்த்தது தான். ஒவ்வொரு கோடையிலும் கண்டிப்பாக அந்த அம்மாசெய்தது போல் ஸ்பெஷல் லஸ்ஸி செய்வேன்.
இதென்ன பெரிய விஷியமா தயிரை அடித்தால் லஸ்ஸி வரபோகுது என்று தானே நினைக்கிறீர்கள்.

நீங்கள் கேட்பது  சரி தான் , ஆனால் இந்த லஸ்ஸியின் சுவைக்கு  முக்கியமான தேவை பால் ஏடு.பால் ஏடு சேர்த்து தயாரித்தால் சுவை கூடுதல், 

கெட்டி தயிருடன், சர்க்கரை, சிறிது பால், பால் ஏடு , ஐஸ் கட்டிகள் சேர்த்து நன்கு நுரை பொங்க அடிக்கனும். அப்படியே ஒரு பெரிய கண்ணாடி டம்ளர் ஊற்றி குடித்தால் ஆகா அமிர்தம்.....



வயிற்று வலி அல்சர் மற்றும் வயிற்று புண் எல்லாத்துக்கும் அருமருந்து லஸ்ஸி...




லஸ்ஸி

கெட்டி தயிர்
பால் ஏடு
சர்க்கரை
ஐஸ் கட்டிகள் பொடித்தது



ரோஸ் மில்க் லஸ்ஸி

கெட்டி தயிர்
பால் சிறிது
பால் ஏடு
சர்க்கரை
ரோஸ் எசன்ஸ் (அ) ரூ ஆப்ஷா
ஐஸ்கட்டிகள் பொடித்தது




பைனாப்பிள் லஸ்ஸி

தேவையான பொருட்கள்
கெட்டி தயிர் - 200 மில்லி
பைனாப்பிள் துண்டுகள் - கால் கப்
பைனாப்பிள் எசன்ஸ் - 2 துளி
சர்க்கரை - 2 மேசை கரண்டி (தேவைக்கு)
ஐஸ் கட்டிகள் - 5 (பொடித்தது)
ஐஸ் வாட்டர் - தேவைப்பட்டால்
விப்பிங் கிரீம் - கால் கப்


செய்முறை

மேலே குறிப்பிட்டுள்ள அனைத்து பொருட்களையும் மிக்சியில் நுரை பொங்க அடித்து கண்ணாடி டம்ளரில் ஊற்றி ஜில்லுன்னு குடிக்கவும்.





பிரியாணி செய்தால் தொட்டுக்க தயிர் பச்சடி செய்வோம் ஹனீஃப் சாப்பிட மாட்டான் அவனுக்காக ஒரு டம்ளர்  லஸ்ஸி செய்து வைத்து விடுவேன்.

0 comments:

Post a Comment

Blog Archive

TAMIL ‘Entertainment

http://cnntamil.blogspot.com/

Blogroll

Blog Archive

facebook

உங்களோடு நான்

Followers

Featured Posts

Popular Posts

Recent Posts