சாப்பாட்டுக்கு முன் ஏதாவது ஒரு கனிவகையை உட்கொள்வது மிகவும் நல்லது’’ என்று வலியுறுத்தும் ‘இயற்கைப் பிரியன்’ ரத்தின சக்திவேல், பெண்களுக்கு அவசியமான, அதிக பலன் தரக்கூடிய சில பழங்களை இங்கு பரிந்துரைக்கிறார்…
சாத்துக்குடி
தலைவலி,
சாதாரண காய்ச்சல், டெங்கு, மஞ்சள் காமாலை போன்ற நோய் கண்டவர் களுக்கும்,
நோயில் இருந்து மீண்டவர்களுக்கும் உடனடித் தெம்பு கொடுக்கக்கூடியது. மயங்கி
விழுந்தவர்களுக்கு சாத்துக்குடி சாற்றை கொடுத்தால் சோர்வு தீரும். மூன்று
நாட்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, அனைத்து சளி பிரச்னைகளும் சரியாகும்.
ஆப்பிள்
சீஸனில்
கிடைக்கும் சிம்லா ஆப்பிள்களைச் சாப்பிடுவது நல்லது. ஸ்டிக்கர்
ஒட்டப்பட்டு, மெழுகு பூசப்பட்ட ஆப்பிள்களான வெளிநாட்டு ஆப்பிள் களைத்
தவிர்க்கவும். `விட்டமின் பி காம்ப்ளெக்ஸ்’ நிறைந்தது. பசியாற்றும் கனி.
மலச்சிக்கல் போக்கும். வீட்டு வேலைகளில் களைத்திருக்கும்போது ஒரு பழம்
உண்டால், உடலுக்குப் புத்துணர்ச்சியும், உடனடித் தெம்பும் கொடுக்கும்.
சப்போட்டா
மாதுளம்பழம்
கிர்ணிப்பழம் பசியாற்றும் பழம். மலச்சிக்கலை விலக்கும். உடலுக்கு குளிர்ச்சி கொடுக்கக்கூடியது. பெண் களுக்கு அடிவயிற்று சூடு போக்கும். நாள்பட்ட மூட்டுவலியைக் குறைக்கும்.
ஆரஞ்சு
இனிப்பான
மற்றும் சத்தான கனி. சாத்துக்குடியின் பலன்களைக் கொடுக்கும்.
மலச்சிக்கலைப் போக்கும். பெண்களின் ரத்தச்சோகை பிரச்னைக்கு மருந்தாக
அமையும்.
‘‘சாப்பாட்டுக்கு
முன் ஏதாவது ஒரு கனிவகையை உட்கொள்வது மிகவும் நல்லது’’ என்று
வலியுறுத்தும் ‘இயற்கைப் பிரியன்’ ரத்தின சக்திவேல், பெண்களுக்கு
அவசியமான, அதிக பலன் தரக்கூடிய சில பழங்களை இங்கு பரிந்துரைக்கிறார்…வெள்ளரிப்பழம்
கோடைக்காலத்தில்
கிடைக்கக் கூடிய பழம். கர்ப்பப்பை பிரச்னை, அடிவயிற்றில் ஏற்படும் சூடு,
சீரற்ற மாதவிடாயை சரிசெய்து, தொப்பையைக் குறைக்கும். மலச்சிக்கல் நீக்கும்.
பிறப்புறுப்பில் ஏற்படும் எரிச்சலைப் போக்கும்.
திராட்சை
கண்
தொடர்பான பிரச்னைகளைத் தீர்க்க வல்லது. கண்களுக்குப் பாதுகாவலன்.
பெண்களின் ரத்தச்சோகையை சீர் செய்வதோடு மலச்சிக்கலைத் தீர்க்கும்.
தர்பூசணி
வெயில்
காலத்துக்கு ஏற்ற பழம். முகப்பரு நீக்கி முகப் பொலிவு தரும். உடலைக்
கட்டுக் கோப்பாக வைக்கும். இதிலுள்ள வெள்ளைப் பகுதியை நீரிழிவு மற்றும்
சிறுநீரகப் பிரச்னை உள்ளவர்கள் தொடர்ந்து சாப்பிட்டு வர, கைமேல் பலன்
கிடைக்கும். சிறுநீரகப் பிணி களுக்கு சிறந்த மருந்து.
இனி… தினம் ஒரு பழம்!
0 comments:
Post a Comment