கோடை வெயில் ஆரம்பித்து விட்டது , உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும், கொப்புளங்கள்,கட்டிகள் ,தோல் சம்பந்தப்பட்ட வியாதிகள். கண் எரிச்சல்.போன்றவை வர வாய்ப்பிருக்கு.
உடல் சூடும் மண்டை சூடு எல்லாமே அதிகமாகும். அதற்கு தலைக்கு மெகந்தி
போட்டுகொள்ளலாம். அல்லது தலைக்கு ஆயில் மசாஜ் செய்து குளிக்கலாம்.
வெயிலினால் ஏற்படும் சூட்டை தணிக்க ஆண்களும், பெண்களும் மருதாணி தலைக்கு தேய்த்து குளிப்பது நல்லது.
மெகந்தி தேய்த்து குளிப்பதனால் நல்ல குளிர்ச்சி ஏற்பட்டு உடல் சூட்டை தணித்து குளு குளுன்னு வைக்கும். சிலருக்கு தலைக்கு மெகந்தி போட்டால் ஒத்துக்காது.தலை வலி ஜலதோஷம் பிடித்து கொள்ளும். அதற்கு கிராம்பை சேர்த்து கொள்ளலாம்.
சிலர் கொஞ்சம்
வெள்ளை முடி தோன்றினாலே சில பேர் பத்து முறை கண்ணடியை பார்ப்பார்கள்.
அய்யோ நாம் கிழவியா(கிழவனா) விட்டோமே என்று தோனும்.யாரும் கிழவி கிடையாது
மனதளவில் எல்லோரும் என்றும்ம் பதினாறு தான்.
சிலருக்கு இளநரையும் வருவதுண்டு. அதற்கு மருதாணி தலைக்கு போட்டு கொள்வது நல்லது.
மெகந்தி கலவை : மருதாணி பொடி, தயிர், திக்கான டீ டிகாஷன்,
(கருவேப்பிலை, வேப்பிலை சிறிது கரிசலாங்கண்ணி கீரை,பாசி பயிறு) இதேல்லாம் காயவைத்து திரித்து வைத்து கொள்ளுங்கள்.
இதை
மேலே குறிப்பிட்டுள்ள மெகந்தி கலவையில் கொஞ்சம் சேர்த்து
கொள்ளுங்கள்.இப்போது அனைத்தையும் நல்ல இட்லி மாவு பதத்திற்கு கரைத்து ஒரு
இரும்பு வானலியில் வைத்து இரவு முழுவதும் ஊறவிட்டு, காலையில் தலையில் தேய்த்து 20 நிமிடம் (அ) 30 நிமிடம் ஊறவைத்து குளிக்கவும்.
இந்த கலவையை ஆறு மணி நேரம் தலையில் வைத்து ஊறவைத்து தேய்த்தால் நன்கு பலன் கிடைக்கும் என்று கேள்வி பட்டேன்.
உடம்புக்கு ஒத்து கொள்ளாதவர்கள், 1 மணி நேரம் முன் தலையில் தடவி ஊறவைத்து குளிக்கவும்.
பீட்ரூட் சாறு எடுத்தும் தலையில் தேய்த்து ஊற வைத்து குளிக்கலாம்.
நல்லெண்ணை அடிக்கடி தேய்த்து எண்ணை குளியல் போட்டாலும் நரை முடி வருவதை தவிர்க்கலாம்.
உடல் சூட்டையும் தணிக்கும். ஒரு நாள் விட்டு ஒரு நாள் நல்லெண்ணை தேய்த்து மசாஜ் செய்து குளித்தால் கூட இளநரை வரமல் இருக்கும்.
செடிக்கு
எப்படி தண்ணீர் ஊற்றி வளர்க்கிறோமோ அப்படி தான் முடிக்கும். நல்ல நிறைய
எண்ணை தலையில் தேய்த்து மசாஜ் செய்து வாரம் இருமுறை குளித்தால் முடியும்
வளரும். நல்ல ஷைனிங்கும் கிடைக்கும்.முடி செம்பட்டையாகமல் இருக்கும்
கருவேப்பிலை உணவில் அதிக அளவில் சேர்த்து வரவும்.
கருவேப்பிலை பொடி , அரைத்து விட்ட கருவேப்பிலை ரச்ம் இது போல் உணவு அதிக அளவில் சேர்த்து கொண்டால் தலை முடி கருகருவென வளரும் நரை முடியும் வருவதையும் தவிர்க்கலாம்.
0 comments:
Post a Comment