அனைவருக்கும் இருக்கும் பிரச்சனை சளி இருமல்,மூக்கடைப்பு, தொண்டை வலி ,
தொண்டை புண்,புறையேறி கொண்டே இருத்தல்.... இப்படி சொல்லி கொண்டே போகலாம்
இதற்காகா நான் இங்கு என் கை வைத்தியம் ஏற்கனவே இங்கு நிறைய போட்டு உள்ளேன்.
மேலே உள்ள லிங்க்களில் கொடுத்துள்ளவைகள் எல்லாமே என் சொந்த அனுபவ குறிப்புகள்.
எங்க மாமியாரின் கை பக்குவம் தொண்டை கர கரப்பு சளி என்றால் முதலில் வெண்ணீர் உப்பு போட்டு வாய் கொப்பளிக்க தான் சொல்வார்கள்.
கிராம்பை வாயில் அடக்கி கொள்ளலாம் ஆனால் அதன் துகள்கள் தொண்டையில் மாட்டி கொண்டு இன்னும் பாடு படுத்தும்.
எந்த டாக்டர் கிட்ட போனாலும் தொண்டை கர கரப்பு மற்றும் இருமல் சளிக்கு
முதல் செய்ய சொல்வது வெண்ணீர் உப்பு போட்டு கார்குலிங் செய்வது தான்.
பிரஷர் இருப்பவர்கள் அதிக உப்பை சேர்த்து கொள்ளாதீர்கள்.
மிளகு , கிஸ்மிஸ் பழம் எடுத்து கொள்ளுஙக்ள்.
வெண்ணீர் உப்பு போட்டு வாஉ கொப்பளிப்பதும் ஒரு தடவை இரண்டு தடவை செய்துட்டு
விட்டுட கூடாது, அரை மணிக்கொருமுறை செய்தால் நல்ல பலன் கிடைக்கும்.
படுக்கும் போது கொஞ்சம் சரிந்து படுங்கள்
0 comments:
Post a Comment