Friday, June 3, 2016

தழும்புகள்
வெட்டுக்காயம், தீக்காயம் போன்றவை ஏற்பட்டு நீண்ட நாட்களாகியும் பலருக்கு தழும்பு மறையாமல் இருக்கும். அதைப் போக்குவதற்கான ஆலோசனைகளைச் சொல்கிறார், திருச்செங்கோடு, கொங்கு மருத்துவமனையின் சரும சிறப்பு மருத்துவர் இரா. மனோன்மணி.
‘‘காயம்பட்ட இடத்தில் ஏற்கெனவே இருந்த சருமம் சேதமாகியிருக்க, புதிதாக செல்கள் வளரும்போது, அந்த இடத்தில் புரோட்டீன் அமைப்பு மாறுபடுவ தால், தழும்பாகத் தனித்துத் தெரிகிறது. அதை இயற்கையான பொருட்கள்கொண்டு சரிசெய்யும் வழிகள் பார்ப்போம்
.
 முகத்தில் உள்ள இறந்த செல்களை, தக்காளிச் சாறு சிறப்பாக நீக்கவல்லது. அதிகளவு விட்டமின்கள் உள்ள இந்த சாற்றை, தழும்பு உள்ள இடத்தில் தடவி மசாஜ் செய்துவர, நல்ல பலன் கிடைக்கும்.
கற்றாழை ஜெல்லை தொடர்ந்து தழும்பில் தடவிவர, தழும்பு மறைவதோடு முகம் பளபளக்கும்.

தீக்காயங்களால் ஏற்படும் தழும்புகள் நீக்க, சிட்ரஸ் பழங்கள் நல்ல சாய்ஸ். எலுமிச்சைச் சாற்றை தழும்பு உள்ள இடத்தில் தடவி இரண்டு நிமிடங்கள் மசாஜ் செய்துவர, இதில் இயற்கையாக உள்ள அமிலத்தன்மை தழும்பை மறையச் செய்வதோடு தோலை மிருதுவாகவும், பளபளப்பாகவும் ஆக்கும்.
பாதாம் எண்ணெய் அல்லது ஆலிவ் எண்ணெய், தழும்பு நீக்க உதவும். ஒரு நாளைக்கு இருமுறை என மசாஜ் செய்துவர, தழும்புகள் மங்கிவிடும்.
பாதாமை பால் அல்லது நீரில் 12 மணிநேரம் ஊறவைத்து அரைத்து, அதன் பேஸ்ட்டை ரோஸ் வாட்டருடன் (பன்னீர்) கலந்து பயன்படுத்தும்போது நல்ல பலன் கிடைக்கும்.
உருளைக்கிழங்கு சாற்றில் உள்ள சல்ஃபர் மற்றும் பொட்டாசியம் தழும்புகளைச் சரிசெய்யும் என்பதால், அதன் சாற்றை தொடர்ந்து அப்ளை செய்யவும்.
 நாள்பட்ட, அழுத்தமான தழும்புகளை நீக்க, மருத்துவரின் பரிந்துரையின் பேரில் அதற்கான பிரத்யேக க்ரீம்கள் மற்றும் ஜெல் வாங்கிப் பயன்படுத்தலாம்…’’

0 comments:

Post a Comment

TAMIL ‘Entertainment

http://cnntamil.blogspot.com/

Blogroll

facebook

உங்களோடு நான்

Followers

Featured Posts

Popular Posts

Recent Posts