அரபிக்
குபூஸ் என்பது நாம செய்யும் சப்பாத்தி போல் தான். இது இங்கு துபாயில்
எல்லா கடைகளிலும் கிடைக்கும். இதை விலையும் ரொம்ப கம்மி தான்.சிறிய வகை
குபூஸில் இருந்து பெரிய குபூஸ் வரை எல்லா டிப்பாட்மெண்ட் ஷாப், குரோசரி
கடைகளில் எல்லாம் கிடைக்கும். சமைக்காத நேரம் இதை வாங்கி கொண்டு வெங்காய
முட்டையோ அல்லது புல்ஜெய் ஆஃப் பாயிலோ போட்டு சாப்பிடலாம் சுலபமாக வேலை
முடியும்.ஆனால் வெளியில் வாங்குவது பிடிக்காததால் நானே செய்து கொடுப்பது.
இது முன்பே பகிற எண்ணி எடுத்து வைத்த போட்டோக்கள் இப்போது தான் நேரம்
கிடைத்தது,
அரபிகளுக்கு
சாப்பாடு இருக்கோ இல்லையோ இந்த குபூஸ் கண்டிப்பாக இருக்கனும். நான் இங்கு
வந்த புதிதில் இருந்து செய்து வருகிறேன். ரொம்ப அருமையாக இருக்கும்,
முன்று நாட்கள் வரை பிரிட்ஜில் வைத்து சாப்பிடலாம், ரொம்ப சாஃப்டாக
இருக்கும், க்டையில் வாங்குவது பிரிட்ஜில் வைத்தால் கடக் முடக் என
ஆகிவிடும்.
துபாய் மற்றும் சவுதியில் அரேபியர்கள் உடைய பேமஸான ரொட்டி இந்த குபூஸ். இந்தகுபூஸ் இல்லாமல் அவர்களுக்கு சாப்பாடு கிடையாது. எல்லா வகையான சாண்ட் விச்சுக்கும் இந்த ரொட்டி தான் உபயோகபடுத்துவார்கள்.
Wheat Kuboos
தேவையான பொருட்கள்
மைதா - முன்று டம்ளர்
கோதுமை மாவு - அரை டம்ளர்
ஈஸ்ட் - ஒரு பின்ச்
சர்க்கரை - இரன்டு தேக்கரண்டி
சூடான பால் - அரை டம்ளர்
உப்பு - அரை தேக்கரண்டி
பட்டர் - ஐம்பது கிராம்
HOW TO MAKE ARABIC KUBOOS (HOMEMADE ARABIC KUBOOS)
HOW TO MAKE ARABIC KUBOOS (HOMEMADE ARABIC KUBOOS)
செய்முறை
சூடான தண்ணிரில் உப்பு,சர்க்கரை,சூடான பால் ,ஈஸ்ட், பட்டரை உருக்கி போட்டு கலக்கி கோதுமை,மைதா கலவையில் கலக்கவும்.
ஒரு கட்ட கரண்டி வைத்து கலக்குங்கள் அப்ப தான் கையில் மாவு ஒட்டாது கலக்கி நல்ல குழைத்து முன்று மணி நேரம்
அப்படியே வைக்கவும்.
மாவை சற்று தளர்த்தியாக குழைக்க வேண்டும்.
பிறகு பெரிய கமலா பழ சைஸ் உருண்டைகள் எடுத்து திக் சப்பாத்தியாக திரட்டி
நான் ஸ்டிக் பேனில் போட்டு இருபுறமும் லேசாக சிவற விட்டு எடுக்கனும்.
நிறைய மாவு தோய்த்து சுடுவதால் பேனில் மாவு ஓட்டி கரிந்து விடும், அடுத்த
குபூஸை திரட்டி போடும் போது கரிந்த மாவு அதில் ஒட்டும் ஆகையால் ஒரு ஈர துணி
கொண்டு அப்ப அப்ப துடைத்து விட்டு போட்டால் நல்ல ப்ரஷாக போட்டு
எடுக்கலாம்.
Maida Kuboos
குறிப்பு:
கிரில்லில் சுடும் சிக்கன் அயிட்டங்களுக்கும்,BBQ அயிட்டங்களுக்கும் தொட்டு சாப்பிடலாம். சில்லி சிக்கன்,பட்டர் சிக்கன் போன்றவைக்கும் தொட்டு கொள்ள நல்ல இருக்கும். குழந்தைகளுக்கு பட்டர் தடவியும் கொடுக்கலாம்.
இதே மாவிலேயே நாண், ரூமாலி ரொட்டி எல்லாம் தயாரிக்கலாம்.
Kuboos with Hamuus.
Kuboos with Grill Fish
0 comments:
Post a Comment