பொதுவா
ஒரு வரி சொல்வாங்க யாரவது வசதியா இருக்கறத பெருமையா சொல்லணும்னா
“அவனுக்கென்ன ஏ.சி.யிலே பொறந்து ஏ.சி.யிலே வளர்ந்தவன் பா”ன்னு சொல்வாங்க.
அப்படி நிஜமாவே வளர்ந்தா என்ன ஆகும்னு பார்க்கலாம்.
கடந்த
2 வருடங்களுக்குள் ஏ.சி.யில்லாத வீடுகளே குறைவு எனலாம். ஏனென்றால்
அலுவலகங்களில் கோடைகால வெப்பத்திற்கு பயந்து ஏ.சி. அறைக்குள் முடங்கிக்
கொள்ளும் ஒரு கலாசாரம் தான் தற்போது நகரங்களில் இருந்து வருகிறது.
அலுவலகங்களில்
ஏ.சி.யை கண்டிப்பாக உபயோகிக்க வேண்டிய கட்டாயம் இருக்கிறது. ஆனால் அதே
பழக்கத்தை வீட்டிலேயும் கடைப்பிடித்தால் என்ன ஆகும்? அதோடு அரை மணி நேரம்
கூட ஏ.சி.யில்லாமல் இருக்கமுடியாதவர்களும் இருக்கிறார்கள்.
இதனால் சருமத்திற்கு எவ்வளவு கேடு தெரியுமா?
சருமம்
அழகாகவும் பளபளப்பாகவும் இருந்தால் யாருக்குத்தான் பிடிக்காது. அப்படி
சருமத்தை நன்றாக பாதுகாக்க விட்டமின் - டி உதவுகிறது. அந்த விட்டமின்- டி
எதிலெல்லாம் கிடைக்கிறது என்றால் “சூரியப் பிரகாச விட்டமின்” என்றும்
அறியப்படுகிறது. சூரியனின் உதவியுடன் உங்கள் உடல் விட்டமின் -டி யை
உருவாக்கமுடியும்.
கோடை
காலத்தில், சன்ஸ்கிரிம் உபயோகிக்காமல் பத்து முதல் 15 நிமிடங்கள்
சூரியவெளிச்சத்திலிருந்தால் உங்களுக்குத் தேவையான விட்டமின்- டி
சூரியனிலிருந்து கிடைக்கும். மற்றும் பால், முட்டையின் மஞ்சள்கரு
போன்றவைகளிலிருந்தும் பெறப்படுகிறது.
நாம்
பார்த்திருப்போம் வெளிநாட்டவர்கள் ’சன் பாத்’ எடுப்பதை. இங்கேயும்
டூரிஸ்ட்டா வந்தா அவங்க சன் பாத் விரும்பி செய்வாங்க. அதற்கு காரணம்
வெளிநாட்டில் சூரியன் எட்டிப்பார்ப்பது குறைவு.
நமக்கு அதன் அருமை தெரியவில்லை என்பதற்கு மிகச் சிறந்த உதாரணம் எப்பொழுதும் ஏ.சி.யிலேயே இருப்பதுதான்.
தோல் சுருங்காம இருக்கணும்னா, வயது முதிர்வு சீக்கிரமாக தோன்றாமல் இருக்கணும்னா தோலில் ஈரப்பதம் இருக்க வேண்டும்.
நாம்
பார்த்திருப்போம் பனிக் காலங்களில் தோல் வறண்டு விடும். சொரிந்தால் வெள்ளை
வெள்ளையாய் கோடுகள் ஏற்படும். தோலில் ஒரு வறட்சி ஏற்படும். உதடுகள் கூட
வெடித்து விடும். இதற்கு காரணம் தோலின் ஈரப்பததை பனி உறிஞ்சி விடுவதுதான்.
அதேதான்
ஏ.சி.யும் செய்கிறது. ரூம் டெம்பரேச்சரை ஏ.சி. உபயோகப் படுத்தும்
அறையிலிருந்து உறிஞ்சி எடுத்துவிடுகிறது. அதோடு நமது தோலிலிருந்தும்
ஈரப்பதத்தையும் எடுத்துவிடுகிறது.
பலமணி நேரம் ஏசியில் இருந்தால் நமது உடலில் இருக்க வேண்டிய வெப்பம் கூட குறைகிறது.
சர்க்கரை
வியாதி இருப்பவர்களுக்கு ஏற்கனவே சருமம் வறட்சியாகத்தான் இருக்கும். இதிலே
அவர்கள் ஏசியை உபயோகித்தால் யோசித்துப்பாருங்கள்?
இவ்வாறு
நாம் சருமத்தை சரியாக பாதுகாக்காமல் அலட்சியமாக விட்டுவிட்டால் சருமத்தில்
தோலின் அடிப்பகுதி வறண்டு விடும். வெண்மையான திட்டுக்கள் மற்றும்
சொரிந்தால் செதில் செதிலாக உதிர்தல். இதைத் தான் ’வங்கு’ என்று
கூறுகின்றனர். சரும நோய் மருத்துவர்கள்.
கோடைக்காலத்தில் அரை மணி நேரம் வெயிலில் நின்றால் சருமத்திற்கு தேவையான அளவு சத்து கிடைக்கும்.
ஆனால் நாம் அதையா செய்றோம். சன் ஸ்க்ரீன் லோஷன் இல்லாமல் வெளியே போறதே கிடையாது. வீட்டிற்கு வந்தாலும் ஏ.சி. அறையில் தான்.
ஏ.சி. உபயோகம் சருமத்திற்கு மட்டுமல்ல தலைமுடிக்கும் நல்லதல்ல. சீக்கிரமே வழுக்கை மற்றும் முடி உதிர்தல் போன்ற பிரச்னைக்கும் ஒரு காரணம் ஏசி உபயோகம் என்கிறார்கள் மருத்துவர்கள்.
ஏ.சி.யை
அலுவலகத்தில் தவிர்க்க முடியாது. குறைந்த பட்சம் வீட்டிலிருக்கும்போதாவது
சற்று காற்றோட்டமான அறையில் அமரும் பழக்கத்தை கடைபிடிக்க வேண்டும்.
வேண்டுமானால்
கடுமையான கோடைகாலங்களில் வீட்டில் ஏ.சி. அறையை பயன்படுத்திக்கொள்ளலாம்.
இந்த பழக்கம் உடலுக்கு மட்டுமல்ல நாட்டிலிருக்கும் மின்சாரப் பிரச்னை
மற்றும் க்ளொபல் வார்மிங்கிற்கும் ஒரு நல்ல தீர்வாக இருக்கும்.
0 comments:
Post a Comment